banner
சோழநாடு - குடந்தை கீழ்க்கோட்டம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 235 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 275 கி.மீ. சென்றால் இத் தலம். கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 80 கி.மீ. மதுரையிலிருந்து 210 கி.மீ
வரிசை எண் : 144
சிறப்பு : நடராஜர் சந்நிதியில் சிவகாமி தாளம் போடும் காட்சியும், மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகு.
இறைவன் :நாகேஸ்வரர், நாகநாதர்
இறைவி : பிருகந்நாயகி, பெரியநாயகி
தலமரம் :
தீர்த்தம் :
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கும்பகோணம் & அஞ்சல் – 612 001 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 0435-2402433

இருப்பிட வரைபடம்


சொன்மலிந்த மறை நான்கு ஆறங்கமாகிச் 
சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதிபோலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலும்
கடல்நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்
மன்மலிந்த மணிவரைத் திண்தோளர் போலும்
மலைஅரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலை வேல் குழகர் போலும்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே
பாடல் கேளுங்கள்
சொன்மலிந்த மறை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க